2025 மார்ச் 21, வெள்ளிக்கிழமை

சாதனை படைத்த த்ரிஷாவின் படம்

R.Tharaniya   / 2025 மார்ச் 20 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை த்ரிஷா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’,மற்றும் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்து 2005-ம் ஆண்டு வெளியான படம் வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது.

மகேஷ் பாபுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வெளியான தெலுங்கு படம் ‘அத்தடு’. த்ரி விக்ரம் னிவாஸ் இயக்கிய இந்தப் படம் பஞ்ச் வசனங்களுடனும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடனும் கமர்ஷியல் கதையாக வெளி யானது. இந்தப்படம், ஸ்டார் மா சேனலில் இதுவரை 1500 முறை ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது.
வேறு எந்த படமும் உலகளவில் இத்தனை முறை ஒளிபரப்பானதில்லை என்கிறார்கள். இது தமிழில் ‘நந்து’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.


   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X