Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 16, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 16 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த நடிகர் சைஃப் அலிகானுக்கு மும்பை லீலாவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இன்று (ஜன.16) அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள அவருடைய இல்லத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாகத் தெரிகிறது. அப்போது நடைபெற்ற சண்டையில் சைஃப் அலி கான் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை பொலிஸாரின் தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர், சைஃப் அலிகான் இல்லத்துக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது கத்தியுடன் வந்த நபருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக சைஃப்அவர் காயமடைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு லீலாவதி மருத்துவமனைக்கு சைஃப் அலி கான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் பற்றி அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மும்பை லீலாவதி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தமானி கூறுகையில், “சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனை அழைத்துவரப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டவடத்தின் அருகே உள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம். அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி உள்ளிட்டோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றி மேலதிக தகவல்களைத் தெரிவிக்க முடியும்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago