Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மே 26 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் 'கிரேண்ட் பிரிக்ஸ்’ (Grand Prix) விருது வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற சாதனையை பாயல் கபாடியா படைத்துள்ளார்.
ஆவணப்பட இயக்குநரான பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ALL WE IMAGINE IS LIGHT’ திரைப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கேன்ஸ் விழாவில் போட்டியிடும் முதல் இந்திய படம் இதுவாகும்.
இப்படத்தில் கனி கஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்காக பாயல் கபாடியா கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளார்.
மிகவும் மதிப்புமிக்க விருதான 'கிரேண்ட் பிரிக்ஸை’ வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையை கபாடியா பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு கபாடியா இயக்கிய ‘A NIGHT OF KNOWING NOTHING’ என்ற ஆவணப்படம் 2021ஆம் ஆண்டு கான் விழாவில் ‘கோல்டன் ஐ’ விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .