Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 17 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். இரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்தது.
இதற்கிடையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று கடந்த 15ஆம் திகதி முதல் படப்பிடிப்பு தொடங்கியது.
படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சண்டை கலைஞர் ஏழுமலை என்பவர் படப்பிடிப்பு தளத்தில் 20அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை பயிற்சியின் போது, அவர் தவறி விழுந்த நிலையில் மார்பில் அடிப்பட்டு, நுரையீரலில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .