Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
J.A. George / 2022 ஜனவரி 25 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொலிவுட் ஜாம்பவான் நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் மோசமான கார் விபத்தில் சிக்கி எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியிருக்கிறார்.
ஹொலிவுட் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த இவர், கடைசியாக கடந்த 2019இல் வெளியான “டெர்மினேட்டர் டார்க்பேட்“ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தநிலையில் 74 வயதான நடிகர் அர்னால்ட் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரின் சன்செட் பவுல்வர்ட் பகுதியிலிருந்து அலென்ஃபோர்ட் அவென்யூவுக்கு தனது பெரிய காரில் சென்றுள்ளார்.
இந்தக் கார் வீதியில் சென்றுக்கொண்டிருந்தபோது இவருக்கு முன்னாள் இருந்த 2 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருக்கிறன. இதனால் அர்னால்ட் வந்த காரும் நிலைதடுமாறி தனக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த ஒருசிறிய காரின் மீதேறி இருக்கிறது.
இந்த விபத்தில் நடிகர் அர்னால்ட்டுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் அர்னால்ட் ஏற்றிய ஒரு சிறிய காரில் இருந்து ஒரு பெண் தலையில் சிராய்ப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago