2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

காதலர் தினத்துக்கு 11 படங்கள் வெளியீடு

Editorial   / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தையொட்டி, தமிழில் 11 படங்கள் வெளியாக இருப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது.

காதலர் தினத்தன்று எப்போதுமே காதலை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறும். ஆனால் இந்தமுறை ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘ஒன்ஸ்மோர்’, ‘டிராகன்’ என வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட படங்கள் யாவுமே காதலர் தினத்தன்று வெளியாகவில்லை.

காதலர் தினத்தன்று ‘2கே லவ் ஸ்டோரி’, ‘பேபி & பேபி’, ‘பயர்’, ‘கண்ணீரா’, ‘காதல் என்பது பொதுவுடைமை’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ‘வெட்டு’, ‘படவா’, ‘ அது வாங்கினால் இது இலவசம்’, ’தினசரி’ மற்றும் ’வருணன்’ என மொத்தம் 11 படங்கள் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே ‘விடாமுயற்சி’, ‘குடும்பஸ்தன்’ ஆகிய படங்கள் திரையரங்குகள் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த 11 படங்களில் ‘2கே லவ் ஸ்டோரி’ மற்றும் ‘காதல் என்பது பொதுவுடைமை’ ஆகிய படங்களை தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

அவற்றுக்கு குறிப்பிடத்தக்க திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. (S.R)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .