2025 மார்ச் 26, புதன்கிழமை

ஒரே காரில் மனைவியுடன் வந்து விவாகரத்து கோரிய ஜி.வி

R.Tharaniya   / 2025 மார்ச் 24 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமார். கடந்த 2013ஆம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.

 இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளதுடன், கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் அண்மையில் பிரிவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று ஒரே காரில் இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்துக்கு வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். 

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .