2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஐஸ்வர்யாவுக்கு என்ன நடந்தது... அதிர்ச்சி பதிவு!

J.A. George   / 2022 பெப்ரவரி 02 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கமல், வடிவேலு, சத்யராஜ், த்ரிஷா, அருண்விஜய் உள்ளிட்டோரை தொடர்ந்து, பாரதிராஜாவும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் ஒரு வார சிகிச்சைக்கு பிறகு தற்போது வீடு திரும்பி இருப்பதாக நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதோடு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தனது போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .