Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 மே 30 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி’.
இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம், வரும் ஜூன் 27 அன்று திரைக்கு வருகிறது. இதனால் புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர்.
பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த வாகனத்திற்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். இந்த வாகனத்தை தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் எஃப் 1 ரேசர், நரேன் கார்த்திக்கேயன் இயக்கி பார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த காணொளியை இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அந்தப் பதிவில், “டியர் எலான் மஸ்க் சார், எங்களது புஜ்ஜி வாகனத்தை நீங்கள் பார்த்து இயக்க வேண்டும் என விரும்பி அழைக்கிறோம். இது 6 டன் பீஸ்ட். முழுவதும் எலக்ட்ரிக், எஞ்ஜினியரிங்கின் உதவியால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது உங்களது சைபர் ட்ரக் உடன் சிறந்த புகைப்படமாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago