2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இரண்டு பாகங்களாக ‘விடுதலை’

J.A. George   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி - சூரி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படம் உருவாகிவருகின்றது.

இந்தநிலையில் 'விடுதலை' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை- பாகம் 1 இன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் விடுதலை 2 ஆம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் விடுதலை- பாகம் 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .