2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

ஆண்ட்ரியாவின் கூச்சம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

36 வயது ஆகி உள்ள நிலையிலும் திருமணம் செய்யாமல் நடிகை ஆண்ட்ரியா படத்தில் ‘பிசி’யாக உள்ளார்.

சினிமா பின்னணி பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.

இதைத்தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம்,தரமணி, வடசென்னை ஆயிரத்தில் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார்.

தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட புஷ்பா படத்தில் "ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா" என்ற பாடலை பாடியிருந்தார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனல்மேல் பனித்துள்ளி என்ற படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகின்றார்.

இது குறித்து கூறுகையில், “அனல்மேல் பனித்துளி படத்தில் ஒரு காட்சியில் நடித்த போது கூச்சமாக இருந்தது. இது புதுமையாகவும் இருந்தது. இந்த காட்சிகளைவிட என் நிஜ வாழ்க்கையில் இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது.” என்றார்.

ஆண்ட்ரியா இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X