Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூலை 12 , பி.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அவன் இவன்' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராமராஜ், உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ராமராஜ்.
கூட்டுறவு வங்கியில் மேலாளரான வந்த இவர், தனது ஓய்வுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த அவன் 'இவன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் பொலிஸாக இயல்பாக நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றார்.
இந்த படத்திற்கு அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தந்து வந்தனர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு நடிகர் ராமராஜ் உயிரிழந்தார். ராமராஜின் இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
72 வயதாகும் ராமராஜின் உடல், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.
மேலும், நடிகர் ராமராஜூக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago