Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 22 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது அரசியல் வருகை குறித்து பேசிய நடிகர் விஷால், மக்களின் முடிவுக்காக காத்திருப்பதாக பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ளவர் விஷால். நடிப்பதில் மட்டுமல்லாமல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவற்றிலும் தலைமை பொறுப்புகள் வகித்து பல்வேறு செயல்பாடுகளை செய்துள்ளார். தொடர்ந்து சினிமாத்துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து நடிகர் விஷால் பேசி வருகிறார்.
ஆனால் சமீபகாலமாக நடிகர் விஷாலும் அரசியலில் நுழைவது குறித்து தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்தை பின்பற்றி தன்னை தேடி வருபவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்புவது போன்றவற்றை செய்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு கிராமத்திற்கு ஷ_ட்டிங் சென்றவர் அங்கு மக்களுக்கு தண்ணீர் வசதி இல்லாததை கண்டு அவர்களுக்கு குடிநீர் வசதிகளை தனது செலவில் செய்து கொடுத்துள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் விஷால் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஷால் “சட்டமன்ற தேர்தல் வருகிறது. நேரடியாக அரசியலில் இறங்குவேனா என்று கேட்டால், நான் வர வேண்டுமா இல்லையா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். இறங்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டால் வேறு வழியே இல்லை.
நான் ஷூட்டிங் சென்ற ஒரு கிராமத்தில் 70 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் இருப்பதை பார்த்தபோது அசிங்கமாக உள்ளது. அதுபோன்ற நிலைமை இல்லாமல் இருந்தால் நல்லது. அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது, நடிகர்கள் ஏன் அரசியல்வாதி ஆகக்கூடாது?” என்று பேசியுள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .