Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூன் 14 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக திகழ்வதோடு நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.
சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்ததில் வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மது, புகை என எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத டி ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் டி ராஜேந்தரை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக டி ராஜேந்தர் அமெரிக்கா அழைத்து செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டி ராஜேந்தர் இன்று அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் டி ராஜேந்தர் விரைவில் நலம்பெற்று திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
கல்ஹாசன் டி ராஜேந்தரை நேரில் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே நடிகர் சிம்பு டிஆரின் மருத்துவ சிகிச்சைக்கான பணிகளை மேற்கொள்ள முன்கூட்டியே அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .