Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 19 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
பெப்ரவரி மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இப்படத்தை முடித்தபின், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அஜித் குறித்து நாம் அறிந்திராத விஷயங்கள் அவ்வப்போது வெளிவரும். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் குறித்து பிரபலம் ஒருவர் பேசியுள்ளார்.
இதில் 'பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அஜித்தை மிகவும் மோசமான வகையில் எழுதியுள்ளார். எப்போதுமே அஜித்தை மோசமாக எழுதி வந்த அந்த பத்திரிகையாளர் ஒரு நாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது சிகிச்சைக்காக ரூ. 2.5 லட்சம் கட்டவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அஜித் உடனடியாக அந்த ரூ. 2.5 லட்சத்தை மருத்துவமனையில் கட்டியுள்ளார்.
தன்னை எவ்வளவு மோசமாக அந்த பத்திரிகையாளர் கூறினாலும், ஆபத்து என்ற நேரத்தில் அஜித் ஓடி போய் உதவியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
11 Apr 2025