2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அஜித் கேட்ட அந்தக் கேள்வி

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அஜித் ரசிகர்களுடன் உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 

அதில், அஜித்தை சந்திப்பதற்காக தேடி வரும் அவரது ரசிகர்கள், "உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம் சார்.." என்று கூற, உடனே அஜித், "தேடிட்டு இருக்கிங்களா... நா என்ன கொள்ளைக்காரனா இல்ல கொலைகாரனா" என்று சிரித்தபடி கேட்கிறார்.
 
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்... உங்களை எப்படியாவது பாக்கணும்னு” ஆசையாய் சொல்ல, அதன் பின்னர் அஜித் அவர்களின் விபரங்களை கேட்டு நலம் விசாரிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 

இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X