2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

அசௌகரியமாக உணர்ந்தேன்...

Editorial   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் அளவிற்கு இந்திய அளவில் பிரபலமாகி விட்ட நடிகை ராஷ்மிகா தனது நடிப்பைவிட தனது க்யூட்டான செயல்பாடுகள் மற்றும் தனது நடனத்தால் ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடுகிறார். அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலும் அதற்கு ராஷ்மிகாவின் வித்தியாசமான நடன அசைவுகளும் ரசிகர்களை கிறங்கடித்தன.

அதேபோல சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்திலும் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா இணைந்து நடனமாடிய பீலிங்ஸ் என்கிற பாடலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த பாடலின் நடன அசைவுகளில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா காட்டிய நெருக்கம் ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்தது என்றால் இன்னொரு பக்கம் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது. இந்தநிலையில் இந்தப் பாடல் படப்பிடிப்பில் தான் அசவுகர்யத்துடன் தான் நடித்தேன் என சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார் ராஷ்மிகா.

“இந்த பாடல் படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்கள் முன்புதான் படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் பாடலில் பலமுறை நான் அல்லு அர்ஜுனால் தூக்கப்படுவது போல நடன அசைவுகள் இருந்தன. பொதுவாகவே ஒருவர் தூக்கப்படும்போது ஏற்படும் சங்கடம் போன்ற போபியா எனக்கு இருக்கிறது. அதனால் இந்த படத்தில் அப்படி நான் தூக்கப்படும் காட்சிகளில் நடித்த போதெல்லாம் ரொம்பவே அசௌகரியமாக உணர்ந்தேன். ஆனால் பாடலுக்கு இந்த காட்சிகள் அவசியம் என்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டு நடனம் ஆடினேன். மற்றபடி இந்த பாடல் மற்றவர்கள் விமர்சிப்பது போல கவர்ச்சியா, ஆபாசமா என்கிற விஷயத்திற்குள் நான் போக விரும்பவில்லை. இயக்குனருக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை ஒரு நடிகையாக செய்வது என் கடமை” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X