Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 2-ஆவது சிங்கிள் கடந்த 16ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
டிரெய்லரை இயக்குனர் அட்லி அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டிரெய்லரில், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் போலீசிடம் இருந்து தப்பிக்க போராடும் குடும்பத்தின் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தை வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதையாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago