2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

D52 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

Janu   / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி இருந்ததுடன் தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திற்கு 'குபேரா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மும்பை தாராவியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

அடுத்ததாக தனுஷ் தனது 52வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் நடிகர் தனுஷ் இயக்குகிறார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், அசோக் செல்வன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 52வது படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு 52வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X