Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட் உலகில் ஊக்கமளிக்கும் மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.
தனது ஒப்பற்ற விளையாட்டுத் திறமையால் அனைவரையும் மகிழ்விக்க தவறியதில்லை. மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த பல்துறை கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ‘800’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இதன் முதல் பார்வை அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17 இன்று வெளியாகி இருக்கிறது.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி, தற்போது '800' படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார்.
இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதற்கு முன் இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி , கடும் எதிர்ப்புகளின் பின் படத்திலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
34 minute ago
46 minute ago