2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

7 விருதுகளை அள்ளிய ஓபன்ஹெய்மர்

J.A. George   / 2024 மார்ச் 11 , மு.ப. 09:56 - 0     - 162

ஒஸ்கர் விருது விழாவில் அதிகபட்சமாக 7 விருதுகளை வென்று கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். 

பாக்ஸ் ஆபிஸில் ஓபன்ஹெய்மர் படத்தை பந்தாடிய பார்பி படம் ஒஸ்கர் விருது விழாவில் ஒரே ஒரு விருது மட்டுமே வென்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

96ஆவது ஒஸ்கர் விருது விழா அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவு, அதாவது இலங்கை நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கும் தொடங்கியது. 

முதலில் நடைபெற்ற ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் பல்வேறு ஹாலிவுட் நடிகைகள் அழகு பதுமைகளாக உடையணிந்துக் கொண்டு விருது விழாவை கண்கவர் நிகழ்ச்சியாக மாற்றினர்.

சிறந்த நடிகர் சிலியன் மர்பி

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம். அணுகுண்டை தயாரித்த ஜே. ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவானது. 

ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு போடப்பட்டு பல லட்சம் உயிர்கள் பலியாக தான் காரணமாகி விட்டோம் என வருந்தும் காட்சிகளிலும், இந்த உலகமே அழியப்போகுது என நினைக்கும் காட்சிகளிலும் தனது நடிப்பால் சிலியன் மர்பி அசத்தியிருந்தார். அந்த படத்துக்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஒஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்

இன்செப்ஷன், டெனட் உள்ளிட்ட பல சிறப்பான படங்களை இயக்கி உலகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள கிறிஸ்டோபர் நோலன் முதல் முறையாக சிறந்த இயக்குநர் விருதை ஓபன்ஹெய்மர் படத்துக்காக வென்றுள்ளார்.

மொத்தம் 7 விருதுகள்

சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் வென்றார். சிறந்த படத்துக்கான விருதும் ஓபன்ஹெய்மர் படத்துக்குத்தான் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை சிலியன் மர்பியும் சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டவுனி ஜூனியரும் வென்றனர். மேலும், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகள் ஓபன்ஹெய்மர் படத்துக்கு கிடைத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X