2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

6 மொழிகளில் அட்லி திரைப்படம் இன்று அறிவிப்பு?

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க  உள்ளதாக கூறப்படும் நிலையில், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான  இன்று(08)  இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனும், அட்லியுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இந்த படத்தை உறுதி செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அதில், அட்லி – அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் அறிவிப்பு ஏப்ரல் 8ஆம் திகதி வெளியாகும் என்றும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஆறு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  இந்த படத்தின் நாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டதாகவும், இன்று வெளியாகும் அறிவிப்பில் அவரது பெயரும் இருக்கும் என்றும் கூறப்படுவது, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X