Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 ஜனவரி 22 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
54 வயதான பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் 5ஆவது தடவையாகவும் விவாகரத்துச் செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பே வாட்ச் உள்பட பல படங்களில் நடித்த இவர், 2010இல் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை1995இல் காதலித்து திருமணம் செய்த பமீலா, 3 ஆண்டுகளுக்கு பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார்.
2006இல் கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார்.
2007இல் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை மணந்த திருமணமும் நிலைக்கவில்லை. அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார்.
ஆனால் 2014இல் மீண்டும் ரிக் சாலமனை திருமணம் செய்து கொண்ட அவர், ஒரு வருடத்துக்கு பிறகு ரிக்கை 2ஆவது தடவையாக விவாகரத்து செய்தார்.
2020-ல் ஹாலிவுட் தயாரிப்பாளரும் சிகை அலங்கார நிபுணருமான ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து 12 நாட்களில் விவாகரத்து பெற்றார்.
பின்னர் தனது பாதுகாவலர் டேன் ஹேஹர்ஸ்ட்டை காதலித்து வான்கூவர் தீவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இப்போது டேன் ஹேஹர்ஸ்டையும் விவாகரத்து செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago