2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

2ஆவது திருமணத்துக்குத் தயாரான நாக சைத்தன்யா

Freelancer   / 2024 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் நாக சைத்தன்யா -ஷோபிதா துலிபாலா இருவருக்கும் இன்றைய தினம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், நாக சைத்தன்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களுடன் அவர்களின் நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் இன்று காலை 9 மணி அளவில் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து முன்னதாக தீயென தகவல்கள் பரவிய நிலையில் மதியம் ஒரு மணியளவில் இந்த தகவலை நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான் என்றாலும் இவர்களின் இந்த நிச்சயதார்த்தம் டோலிவுட்டில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் சமந்தாவின் தந்தையைப் போலவே தற்போது நாக சைத்தன்யாவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அவரின் இரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சமந்தா உடனான பிரிவிற்கும் நாக சைத்தன்யா -சோபிதாவின் காதல்தான் காரணம் என்பதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாக சைத்தன்யா. இவர்களது திருமணம் 4 ஆண்டுகள் நீடித்த நிலையில் கடந்த இந்த 2021ஆம் ஆண்டில் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர்.

இதையடுத்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, தற்போது மலையாளம் உள்ளிட்ட அடுத்தடுத்த மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட நாட்களாக வெறும் வதந்தியாகவே வலம்வந்த நாக சைத்தன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் காதல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X