Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வித்யுத்ஜமால். இவர் பில்லா 2, அஞ்சான் போன்ற தமிழ் படங்களிலு ம்நடித்துள்ளார். இந்தநிலையில், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றன.
இமயமலை தொடர்களில் ஒருவார காலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கும் வகையில், மூன்று புகைப்படங்களையும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார் என்பது பற்றியும் வித்யுத்ஜம்வால் விளக்கம் அளித்து இருக்கிறார்.
14 ஆண்டுகளுக்கு முன்புஆரம்பித்த வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வரை வித்யுத்ஜம்வால் யார்உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார்.
ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து காட்டு பகுதியில் யார் உதவியும் இன்றி இயற்கையுடன் ஒன்றி இருக்கும்வகையில், வித்யுத்ஜம்வால் ஏழு முதல் பத்து நாட்கள் வரை காட்டு பகுதியில் தனது உடலில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக கழித்து வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு இமயமலை பகுதிகளில் நிர்வாணமாக வசித்துள்ளார்.
இவ்வாறு செய்யும்போது, தன்னால் இயற்கையுடன் ஒன்றிருக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படி இருக்கும் போது தனக்கு புதுவித சக்தி கிடைப்பதாகவும், இங்கிருந்து கிளம்பும்போது அந்த சக்தியுடன் வீட்டுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த அனுபவம் தன்னை புதிதாக பிறந்ததை போன்ற அனுபவத்தை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
11 Apr 2025