Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூலை 11 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங். அவர் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் நான்கு மாடி அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை 119 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுக்குமாடி குடியிருப்பில் 16, 17, 18, 19 ஆகிய தளங்களில் அந்த வீடு அமைந்துள்ளதாம்.
மொத்தம் 11,266 சதுர அடி வீடு. மாடிப் பகுதி மட்டும் 1300 அடி. 19 கார்களை நிறுத்தும் வசதி கொண்டது. அதற்காக பத்திரப் பதிவுக் கட்டணம் மட்டும் 7.13 கோடி ரூபாயாம்.ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரது வீட்டிற்கருகில்தான் ரன்வீர் சிங் வாங்கியுள்ள 'சாகர் ரேஷம்' என்ற இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறதாம்.
தங்களது ஓ பைவ் ஓ மீடியா கம்பெனி மூலம் ரன்வீர் சிங்கும், அவரது அப்பாவும் இந்த குடியிருப்பை புக் செய்துள்ளார்களாம்.பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை திருமணம் செய்துள்ள ரன்வீர் சிங் தற்போது 'சர்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago