Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் திகதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது.
தற்போது லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க என்று கூறியிருக்கிறார். அதோடு, பல ஆயிரம் பேர் இதற்காக உழைத்திருக்கிறார்கள். அதனால் படம் தொடங்குவதற்கு முன்பு எப்படியாவது திரையரங்கம் சென்று அமர்ந்து விடுங்கள் என்று அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக லியோ படத்தின் முதல் 10 நிமிடத்தில் ஏதோ ஒரு முக்கிய சம்பவம் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதன் காரணமாகவே இப்படி தங்களை அலர்ட் பண்ணி உள்ளார் என்று விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
54 minute ago
58 minute ago
2 hours ago