2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் இதுதான்.

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில்,  அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும்,  இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில், பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும்,  யோகி பாபு உள்பட பல தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இந்த படத்தின் டைட்டில் 'லயன்' என்று வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'ஜவான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்த படத்தின் டீஸர் தயாராகி அதற்கான சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும்,  அதில் இருந்து கசிந்த தகவலின்படி இந்த படத்தின் டைட்டில் 'ஜவான்' என்றும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து,  இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

மேலும்,  'ஜவான்' படத்தை முடித்துவிட்டு,  இயக்குனர் அட்லி அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும்,  இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .