Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூலை 31 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வந்த ’சந்திரமுகி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ’சந்திரமுகி 2’ படம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டரில் வேட்டையன் ராஜா கேரக்டரில் அட்டகாசமாக ராகவா லாரன்ஸ் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சந்திரமுகி முதல் பாகத்தில் வேட்டையன் ராஜா என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் மட்டும் வருவார். ஆனால் இந்த படத்தில் படம் முழுவதும் வேட்டை ராஜா கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .