Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘தளபதி 68’ உருவாக உள்ளது. அத்துடன், லியோ படப்பிடிப்பினை முடித்த நடிகர் விஜய் நோர்வே சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகா நடிப்பில், கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாரின் ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது.
தற்போது, ‘காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘தளபதி 68’ படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடிக்க ஜோதிகாவிடம் கால்சீட் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2000இல் குஷி, 2003இல் திருமலை ஆகிய வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். 20 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா-விஜய் இணைவார்களா என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
37 minute ago
49 minute ago