2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்த்து சொன்ன நடிகை சமந்தா

Editorial   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை சமந்தா, நடிகரும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் மாமன் மகனுமான ராணா டகுபதியின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினார். அவரது பிரிவு குறித்து பல வதந்திகள் எழுந்தபோதும் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது சமந்தா நாக சைதன்யாவின் மாமன் மகனான நடிகர் ராணா டகுபதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது.

நேற்று (டிசம்பர் 14) பிறந்தநாள் கொண்டாடிய ராணாவை  குறிப்பிட்டு சமந்தா, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ராணா. உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பானவை மட்டுமே கிடைக்கட்டும். உடல் பலமும், நல்ல உள்ளமும் கொண்ட கடவுளுக்கு விருப்பமான மனிதர் நீங்கள்’ என வாழ்த்தியுள்ளார். 

இதையடுத்து, நீங்கள் இன்னும் முன்னாள் கணவரின் குடும்பத்தினருடன் நட்பில்தான் இருக்கிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் ராணா ஏற்கெனவே சமந்தாவுடன் இணைந்து பாஸ்கர் இயக்கிய ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .