2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

விஷ்ணுவின் திருப்புமுனை

Mithuna   / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஷ்ணு விஷால், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ள ’லால் ஸ்லாம்’ திரைப்படம் வரும் 9ஆம் திகதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி அண்மையில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவருடன் இன்னொரு மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அருண் ராஜா காமராஜ் ஏற்கனவே ’கனா’, ’நெஞ்சுக்கு நீதி’ ஆகிய திரைப்படங்களையும் ’லேபிள் என்ற ஹாட்ஸ்டார் வெப் தொடரையும் இயக்கிய நிலையில் அவருடைய அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X