Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் வடிவேலு. அப்போது அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்தார். செல்லும் இடமெல்லாம் அவரை ஒரு குடிகாரர் என்றும் விளாசித் தள்ளினார் வடிவேலு. அப்போது வடிவேலுவின் பிரச்சாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தமிழில் ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி, வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டியில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : “விஜயகாந்தை குடிகாரர்னு சொல்லும் வடிவேலு மட்டும் குடிக்க மாட்டாரா. அவரும் குடிகாரர் தான். நல்லா குடிப்பார். அவரை வடிவேலு இல்லை குடிவேலுனு தான் சொல்வார்கள்.
அன்றைய காலகட்டத்தில் வடிவேலுவுக்கு கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதன் காரணமாக அவர் விஜயகாந்தை தாக்கி பேசினார். அதுமட்டுமின்றி அவருக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையே பிரச்சனையும் ஓடிக்கொண்டிருந்தது. வடிவேலு பகலில் குடிக்க மாட்டார். இரவில் தான் குடிப்பார். வடிவேலுவிடம் 2 லைன் சொன்னா போதும், அதை சீனாக டெவலப் செய்துவிடுவார். அதுவும் ஸ்பாட்டிலேயே அதை செய்வார். அப்படி ஒரு மாபெரும் கலைஞன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025