2024 டிசெம்பர் 18, புதன்கிழமை

வசூல் மழையில் ‘ராயன்’

Freelancer   / 2024 ஜூலை 30 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படங்களில் ஒன்றான ராயன் திரைப்படம் வெளியாகி ஒரு சில நாட்களேயான நிலையில், இத்திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை புரிந்து வருகின்றது.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’, சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகி அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இப்படத்தின் மூலம் தன்னை இயக்கிய தனது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவனை தனுஷ் இயக்கியுள்ளார். மேலும் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைக்கத் துவங்கியது. இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த எந்த படத்திற்கும் கிடைக்காத வசூலும், வரவேற்பும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராயன் திரைப்படம் வெளிவந்து 4 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளாவிய ரீதியில், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படத்தயாரிப்பு குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .