Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் இரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. இந்நிலையில் தன்னுடைய வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகமாக ‘டிமாண்டி காலனி 2’ படத்தை இயக்கியுள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் திகதி தங்கலான் படத்துடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளில் தங்கலான் கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்ததால் டிமாண்டி காலணி பக்கம் இரசிகர்கள் சாய ஆரம்பித்தனர்.
இதையடுத்து வார விடுமுறை நாட்களில் டிமாண்டி காலணிக்கு ஷோக்கள் அதிகரிக்கப்பட்டன. இரண்டாவது வாரத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் டிமாண்டி காலணிக்கு தங்கலானை விட அதிக ஷோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படம் முதல் வார இறுதியில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .