2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

”லியோ” இசை வெளியீட்டு விழா இரத்து

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“லியோ' திரைப்படம் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது. 

இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் “லியோ” பட இசை வெளியீட்டு விழாவினை நடத்தப்போவதில்லை என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. 

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், 'லியோ” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இரத்து செய்கிறோம். நிகழ்ச்சியைகாணவரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. 

எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். 

பலர் நினைப்பது போல், இது அரசியல்அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல' என அதில் பதிவிடப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .