2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

லாஸ்லியாவின் புதிய படத்தின் டீசர் வெளியீடு

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனலின் மூலம் தனது இரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரி பாஸ்கர். அடுத்ததாக படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இவர் நடித்துள்ள படத்துக்கு “மிஸ்டர் ஹவுஸ் கீபிங்” என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் ஹரி பாஸ்கருக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹரி பாஸ்கர் , வீட்டில் ஐடி-யில் வேலை செய்கிறேன் என வீட்டுக்கு தெரியாமல் சென்னையில் வந்து லாஸ்லியா வீட்டில் வீட்டு பணி செய்யும் நபராகவுள்ளார். 

லாஸ்லியாவிடம் காதல் கொள்கிறார். ஆனால் லாஸ்லியா பல நபர்களை டேட் செய்து வருகிறார் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார். படத்தின் ரிலீஸ் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.(AN)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .