Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் ரேகா நாயர், பேட்டி ஒன்றில் இயக்குனர் இமயம் பாரதிராஜா குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் ரேகா நாயர். இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக ரேகா நாயரின் நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் கடுப்பான ரேகா நாயர், சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு நடைபயிற்சி செய்ய வந்த பயில்வான் ரங்கநாதனை நடு ரோட்டில் அடிக்க பாய்ந்ததும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் ரேகா நாயர், பேட்டி ஒன்றில் இயக்குனர் இமயம் பாரதிராஜா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : 'நான் பாரதிராஜா சாரை அவ்வப்போது பார்த்து பேசுவேன். அப்போதெல்லாம் அவர் என்னிடம் கேட்பது ஒன்றுதான், ஏன்டி நான்லாம் படம் பண்ணும்போது நீ இல்ல. அப்பல்லாம் ஏன் நீ என்ன வந்து பாக்கல. நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் டீ-னு சொல்வார்.
எனக்கு நன்றாக தெரியும் இப்போ நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லைன்னு. பாலு மகேந்திரா, பாரதிராஜா, பாக்யராஜ், பாலசந்தர் ஆகியோர் இருந்த காலகட்டத்தில் நான் சினிமாவுக்கு வந்திருந்து, அப்போது எனக்கு ஒரு 20 முதல் 25 வயசு வரை இருந்திருந்தால் நான் நிச்சயம் ஹீரோயின் ஆகிருப்பேன் என ரேகா நாயர் பேசியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .