Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
J.A. George / 2022 மார்ச் 01 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமா பாடல்களில் முதன் முதலாக அனிருத் இசையமைத்து தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யு டியூபில் முதன் முதலில் 100 மில்லியன் பார்வைகள் சாதனையைப் படைத்தது.
அதற்குப் பிறகுதான் யு டியுபை இந்தியத் திரையுலகினர் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தப் பாடலுக்குப் பிறகு பல பாடல்கள் 100 மில்லியன் சாதனையைப் படைத்தன.
ஆனால், 'மாரி 2' திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ் எழுதி, தீ-யுடன் இணைந்து பாடிய 'ரவுடி பேபி' பாடல் வெறும் 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகள் என்ற புதிய சாதனையை படைத்தது.
இந்நிலையில் அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத், ஜோனிதா காந்தி பாடிய 'அரபிக்குத்து' பாடல் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
'ரவுடி பேபி' பாடல் யு டியூபில் வெளியாகி கடந்த மூன்று வருடங்களில் 1300 மில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்தியத் திரையுலகத்தின் முதல் அதிகப் பார்வை பாடல் என்ற பெருமையுடன் உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago
5 hours ago