Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
J.A. George / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 2’ திரைப்படம் கடந்த பெப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதனால் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்கிற சரித்திர திரைப்படத்தையும் ஓடிடி-யில் வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் அன்டனி பெரும்பாவூர் அறிவித்து உள்ளார்.
இதுதவிர, அதே தயாரிப்பாளரின் தயாரிப்பில் மோகன்லால் நடித்து வரும் ‘புரோ டாடி’, ‘டுவெல்த் மேன்’, ‘அலோன்’ மற்றும் புலிமுருகன் இயக்குநர் இயக்கும் திரைப்படம் என மேலும் 4 திரைப்படங்களையும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட அவர் முடிவு செய்துள்ளாராம்.
இந்த திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிட்டு 21 நாட்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட திரைப்படக்குழுவினர் அனுமதி கேட்டுள்ளனர்.
எனினும், திரையரங்கு உரிமையாளர்கள் அதனை ஏற்காமல் 80 நாட்களுக்கு பிறகே ஓடிடி-க்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் திரையரங்குக்கு பதிலாக ஓடிடி-யில் வெளியிடும் முடிவை எடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
29 minute ago
30 minute ago