Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டதால் அப்செட்டில் இருந்த மாளவிகா மோகனன் மீடியாக்களில் வந்த செய்திகளை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.
மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போலே' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.
அதன் பிறகு 'பியாண்ட் த கிளவுட்ஸ்' என்ற இந்தி படத்தில் இஷான் கட்டார்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதையடுத்து தமிழில் இவர் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
'பேட்ட' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துவிட்டார் மாளவிகா மோகனன்.
அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார்.
இந்த படத்தின் மூலம் மாளவிகா மோகனனுக்கு மேலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்காள்.
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிடுவார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் அவர் பதிவிட்ட புகைப்படத்தை இப்போது படு கவர்ச்சியாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அந்த புகைப்பட செய்திக்கு நெட்டிசென்கள் படுமோசமாக கமெண்டுகளையும் செய்தனர். ஏற்கனவே தனது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டதால் அப்செட்டில் இருந்த மாளவிகா மோகனன் மீடியாக்களில் வந்த செய்திகளை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.
தன்னை பற்றி தரக்குறைவாக செய்தி வெளியிட்ட இணையதள பக்கத்தை டேக் செய்து 'ஒரு புகைப்படம் வெளியானால் அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை பற்றி அறிய வேண்டியது ஊடகங்களே, ஆனால் அவர்களே அதைப்பற்றி அறியாமல் தங்களது இணையதள பக்கங்களில் மோசமாக செய்தி வெளியிடலாமா.? என மாளவிகா மோகனன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago