2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மார்பக அறுவை சிகிச்சைக்காக பல இலட்சம் செலவு செய்த நடிகை

Editorial   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியா கலிஃபா ஆபாச படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானவர்.ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய மியா கலிஃபா தற்போது ஃபேஷன் டிசைனராக இருந்து வருகிறார்.

மியா கலிஃபா டிக்டாக்கில் உள்ளார்.அடிக்கடி தனது வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றி பல லட்ச லைக்ஸ்களை பெறுவார். சமீபத்தில் மியா பதிவிட்ட வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

சமீபத்தில் டிக்டாக் வீடியோ ஒன்றில் மியா கலிஃபா தனது ‘எதிர்கால’ மகளைப் பற்றிய ஓவியத்தின் போது கொஞ்சம் வேடிக்கையாக ஒரு விஷயத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘அவள் தன் தாயைப் போல தோற்றமளிக்க விரும்பினால், போலி மார்பகங்களுக்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்’ என்று சொல்லப்பட்டிருந்தது.இந்த வீடியோ மியா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் மியா கலிஃபா தனது மார்பக அறுவை சிகிச்சைக்காக 13,000 டாலர் ,அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சம் செலவு செய்ததாகவும், மூக்கில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்காக 15,000 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 11 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ததாக கூறியுள்ளார்.

அவர் பதிவிட்ட டிக்டாக் வீடியோ 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.சிலர் மார்பக அறுவை சிகிச்சைக்காக இவ்வளவு செலவு செய்தீர்களா என பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மியா கலிஃபா தற்போது சமூக ஊடகங்கள் மூலமாகவும், சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வது மூலமாகவும் சம்பாதித்து வருகிறார்.மியா கலிஃபாவின் மாத வருமானம் 30000 டாலர், இந்திய மதிப்பில் 22 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மியா கலிஃபாவிற்கு இன்ஸ்டாகிராமில் 26 மில்லியனுக்கும் மேல் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.

அமெரிக்காவில் வசித்து வரும் மியா கலிஃபா லெபனான் நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .