2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பிரபல நடிகருடன் பார்ட்டியில் மீரா ஜாஸ்மின்

Freelancer   / 2022 ஜூலை 25 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் பிரபல நடிகருடன் பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

தமிழ் திரையுலகில் மாதவன் நடித்த 'ரன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மீரா ஜாஸ்மின், அதன்பின் விஜய் நடித்த 'புதிய கீதை', அஜித் நடித்த 'ஆஞ்சநேயா', சூர்யா நடித்த 'ஆயுத எழுத்து', விஷால் நடித்த 'சண்டக்கோழி ', உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது அவர் ஒரு மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மீரா ஜாஸ்மின் பல கிளாமர் புகைப்படங்களை சமீபத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும், அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. 

இந்நிலையில் பிரபல நடிகர் நரேனுடன் மீரா ஜாஸ்மின் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நரேனை கட்டிப்பிடித்து கொஞ்சுவது உள்பட பல புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .