Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
90-களில் சிறுவர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன்.
இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் தொடரில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று(16) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
3 hours ago