Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் திரைப்பட சங்கங்களில் புகார் கொடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் பொலிஸாரிடம் புகார் அளியுங்கள் என்றும் பிரபல நடிகை கூறியுள்ளார்.
தமிழில் ’கோரிப்பாளையம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’மைதானம்’ ’சோக்காலி’ ’அப்புச்சி கிராமம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை சுவாசிகா.
இவர் மலையாள திரையுலகில் தற்போது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த முன்னணி நடிகைகள் சேர்ந்து பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகைகள் தங்களுக்கு பாலியல் பிரச்சனை ஏற்பட்டால் இந்த சங்கத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் இதுகுறித்து நடிகை சுவாசிகா கூறியபோது,
‘மலையாள திரையுலகை பொறுத்தவரை நடிகைகள் பாதுகாப்பாக தான் இருக்கின்றார்கள். ஒருவேளை அதையும் மீறி நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் சினிமா சார்ந்த சங்கத்தில் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர்கள் மூலம் நீதி கிடைக்கும் என்பதில் எந்த உறுதியும் கிடையாது. எனவே பாலியல் தொல்லை ஏற்பட்டால் உடனே பொலிஸார் அல்லது மகளிர் ஆணையத்தில் புகார் அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago