2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

படு மோசமான படுக்கையறை காட்சியில் ரெஜினா

Editorial   / 2022 ஜூலை 25 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் கண்ட நால் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனு,ம் மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, கள்ளபார்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் உருவான பார்ட்டி திரைப்படம் சில பிரச்சினைகள் காரணமாக இன்னும் வெளிவராமல் இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் சுசிலீக்ஸ் சஞ்சிதா ஷெட்டி ஆகிய இருவருடன் சேர்ந்து ரெஜினாவும் ஒரு ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகப்போகிறது என்று தெரியவில்லை. காரணம் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது.

ஆம் உண்மைதான் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றது.

விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் இவர் இந்த வருடம் மட்டும் 5 வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது சூர்வீர் என்ற ஹிந்தி வெப்சீட் ஒன்றில் படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார். என்ன தான் சென்சார் இல்லை என்றாலும் ஒரு ஞாயம் வேண்டாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .