2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

படுக்கையில் கட்டி புரண்ட ராஷ்மிகா... யாருடன் தெரியுமா?

Editorial   / 2023 பெப்ரவரி 17 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் கன்னட மொழி திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம்  புகழ்பெற்றார். 

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சமீபத்தில் இவர் தளபதி விஜயுடன் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இவர் கன்னட இயக்குனர் மற்றும் நடிகருமான ரிஷப்ஷன் என்பவரை காதலித்து வந்தார். அவர்களது காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று அதன் பின்னரும் முறிந்து போனது. 

இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக தெலுங்கு சினிமாவில் செய்திகள் பரவி வந்தன. 

அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இருவரும் அவ்வப்போது ஒன்றாக சுற்றித் திரிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி  கிசுகிசுத்தது.

ராஷ்மிகா விஜய் தேவர கொண்டாவுடன்  இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர்கள் 'டியர் காம்ரேட்' திரைப்படத்திலும் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார். 

அதில் படுக்கையில் படுத்துக்கொண்டு தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சியவாறு  அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என அந்த வீடியோவை பதிந்து வெளியிட்டு இருக்கிறார் ராஷ்மிகா. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .