Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூன் 11 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை நயன்தாராவின் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தம்பதிகளுக்கு கொடுத்த பரிசு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 9ஆம் திகதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
குறித்த திருமணத்தில் பல முன்னணி பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்திவிட்டு சென்றனர்.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் நயன்தாரா விக்கி தம்பதிகள் வெள்ளி மற்றும் தங்க பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், நயன்தாராவின் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்த ரஜினிகாந்த், குறித்த தம்பதிகளுக்கு அளித்துள்ள பரிசு தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மணமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன் தரப்பிலிருந்து, முப்பது சவரன் தங்க நகைகள் மணமக்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.
இந்த தகவல் தற்போது வெளியே கசிந்த நிலையில், ரசிகர்கள் குஷியில் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .