2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம்

Mayu   / 2024 நவம்பர் 20 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக தன் வழக்கிறஞர் வந்தனா ஷா மூலம் சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்ட சில மணிநேரத்தில் கிட்டார் கலைஞரான மோகினி டே தன் விவாகரத்து குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக தன் வழக்கிறஞர் வந்தனா ஷா மூலம் சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்ட சில மணிநேரத்தில் கிட்டார் கலைஞரான மோகினி டே தன் விவாகரத்து குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார்.

மோகினியும், அவரின் கணவர் மார்க் ஹார்ட்சச்சும் கூட்டாக சேர்ந்து இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

நானும், மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இருவரும் பேசி மனமொத்து இந்த முடிவை எடுத்தோம். எங்களுக்கு வாழ்க்கையில் வெவ்வேறு விஷயம் பிடித்திருக்கிறது. அதனால் மனமொத்து பிரிந்துவிடுவது தான் சரி என்கிற முடிவுக்கு வந்தோம்.

இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். MaMoGi, மோகினி டே குரூப்ஸ் உள்ளிட்ட பல ப்ராஜெக்டுகளில் சேர்ந்தே வேலை செய்வோம். நாங்கள் நன்றாக சேர்ந்து வேலை செய்வதில் எப்பொழுதுமே பெருமை கொண்டிருக்கிறோம். அது தற்போதைக்கு நிற்காது.

உங்களின் ஆதரவுக்கு நன்றி. நாங்கள் எடுத்த முடிவை தயவு செய்து கவுரவித்து இந்த நேரத்தில் எங்களிடம் பாசிட்டிவாக இருக்கவும். எங்களின் பிரைவசியை மதிக்கவும். எந்த கணிப்பும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த மோகினி டே இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்ரூப்பை சேர்ந்தவர். ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து உலக அளவில் 40 இசை நிகழ்ச்சிகளில் பேஸ் கிடார் வாசித்திருக்கிறார்.

29 வயதாகும் மோகினி டே விவாகரத்து குறித்து அறிவித்திருப்பது இசை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் தான் அதிர்ச்சி கொடுத்தார்கள் என பார்த்தால் நீங்களுமா மோகினி என அவரை நன்கு தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்கிறார் என்பதை சினிமா ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. விவாகரத்து குறித்த அறிக்கையை கண்ணால் பார்த்தும் கூட அதை நம்ப மறுக்கிறார்கள் ரசிகர்கள். உங்கள் வாழ்க்கையில் விவாகரத்து வரும்னு நினைக்கல பாய் என புலம்பித் தள்ளுகிறார்கள்.

இதற்கிடையே போர் (Bore) அடிப்பதால் தான் பிரபலங்கள் விவாகரத்து பெறுகிறார்கள், பலமுறை திருமணம் செய்து கொள்கிறார்கள் என சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிரபல சினிமா ஜோடி ஒன்றின் திருமண வாழ்க்கை பிரச்சனையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார் அவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .