2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நடிகை கஸ்தூரி மீண்டும் கர்ப்பமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

J.A. George   / 2022 ஜனவரி 26 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை கஸ்தூரி மீண்டும் கர்ப்பம் என ஷேர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

நடிகை கஸ்தூரி 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கமல், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கான இடத்தை தக்க வைத்தவர் கஸ்தூரி.

அவ்வப்போது தனது தனிப்பட்ட போட்டோக்களையும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் கஸ்தூரி. 

அந்த வகையில் தற்போது வயிற்றை நிமிர்த்தி கர்ப்பிணி பெண் போல் நின்று ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு மீண்டும் கர்ப்பம் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 3 மாதத்தில் இரண்டு முறை கர்ப்பமா கலக்குங்க கஸ்தூரி என கிண்டலடித்துள்ளனர். மேலும் பலர் கர்ப்பமான கஸ்தூரிக்கு வாழ்த்துக்களை கூறி பூச்செண்டுகளையும் அனுப்பியுள்ளனர்.

நடிகை கஸ்தூரி தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் கர்ப்பிணி வேடத்தில் இளம் தாயாக நடிக்கிறார் கஸ்தூரி அந்த போட்டோக்களை தான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பகீர் கிளப்பியுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .